Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இரத்மலானை – கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

August 1, 2026

வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்

August 1, 2026

பிரதேச நிர்வாக அலகுகளை, அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்கவும்-ஜனாதிபதி

August 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்.எஸ்.பீ. யூ.எஸ்.பீ. என்.பீ.எஸ். பீ.எஸ்.சீ. நியமனம்
இலங்கை

புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்.எஸ்.பீ. யூ.எஸ்.பீ. என்.பீ.எஸ். பீ.எஸ்.சீ. நியமனம்

ThanaBy ThanaAugust 1, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்.எஸ்.பீ. யூ.எஸ்.பீ. என்.பீ.எஸ். பீ.எஸ்.சீ. நியமனம்

முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்கவினால், இராணுவ பதவி நிலைப் பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்.எஸ்.பீ. யூ.எஸ்.பீ. என்.பீ.எஸ். பீ.எஸ்.சீ. லெப்டினன்ட் ஜெனரலாக தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவினால் இன்று (31) பிற்பகல் அவரிடம் கையளி்க்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இப்பதவி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று (31) தனது பதவியிலிருந்து ஓய்வுபெற உள்ளார்.

மாத்தறை புனித சேவியர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பிரேமரத்ன, 1990 ஆம் ஆண்டு பயிலுநர் கெடற் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்தார். 1992 ஆம் ஆண்டு தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, இரண்டாம் தர லெப்டினன்ட்டாக நியமனம் பெற்றதுடன், பின்னர் இலங்கை பீரங்கிப் படையணியின் பீரங்கி அதிகாரியாக சேவையில் இணைந்தார்.

அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்படை பட்டப்பின்படிப்புப் பாடசாலையில் பாதுகாப்பு கல்வி தொடர்பில் முதுகலைப் பட்டத்தையும், களனிப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கல்வி தொடர்பில் முதுகலைப் பட்டத்தையும் (M.Def.S) பெற்றுள்ளார்.

36 வருட கால சிறந்த இராணுவ சேவைக் காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு தொழில்சார் மற்றும் விசேட பயிற்சி நெறிகளைப் பயின்றுள்ள பிரேமரத்ன, மனிதாபிமான நடவடிக்கையின் போது வெளிப்படுத்திய துணிச்சலுக்காக ‘ரணசூர’ பதக்கத்தை இரு முறையும், இராணுவ வாழ்க்கையில் வெளிப்படுத்திய சிறப்பான சேவையைப் பாராட்டி ‘உத்தம சேவா’ பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-07-31

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இரத்மலானை – கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

    August 1, 2026

    வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்

    August 1, 2026

    பிரதேச நிர்வாக அலகுகளை, அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்கவும்-ஜனாதிபதி

    August 1, 2026

    தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபா போதைப்பொருள்

    August 1, 2026
    Editors Picks

    இரத்மலானை – கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

    August 1, 2026

    வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்

    August 1, 2026

    பிரதேச நிர்வாக அலகுகளை, அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்கவும்-ஜனாதிபதி

    August 1, 2026

    புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்.எஸ்.பீ. யூ.எஸ்.பீ. என்.பீ.எஸ். பீ.எஸ்.சீ. நியமனம்

    August 1, 2026

    இரத்மலானை – கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

    August 1, 2026

    வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்

    August 1, 2026

    பிரதேச நிர்வாக அலகுகளை, அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்கவும்-ஜனாதிபதி

    August 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.