கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் கோவிந்தராஜ் நேசமலர் அவர்கள் மற்றும் உறுப்பினர் சுந்தரராஜா சுரேஷ் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் வேலைத்திட்ட முன்மொழிவின் படி ரூபாய் 10 இலட்சம் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்ட தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்கள், உறுப்பினர் கோவிந்தராஜ் நேசமலர் அவர்கள், உறுப்பினர் சுந்தரராஜா சுரேஷ் அவர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் என்போர் கலந்துகொண்டனர்.
