ரூ.6 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான மூக்குக்கண்ணாடிகள் இலவசம்: வினோத்காந்தின் முயற்சி.
(மின்மினி மின்ஹா)
சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதி தவிசாளரும், வாய்ஸ் ஒப் ஃபியூச்சர் ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளருமான வெள்ளையன் வினோத்காந்த் தலைமையில் நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு நேற்று (14) புதிய வளத்தாப்பிட்டி ஸ்ரீ நாவலர் சனசமூக நிலையக் கட்டிடத் தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
வாய்ஸ் ஒப் ஃபியூச்சர் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் அழகிரி ஆனந்தராஜ் (கண்ணன்) அவர்களின் வழிகாட்டலில், அம்பாறை பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். சோமசிறி அவர்களின் ஆலோசனையுடனும், AFRON ஹோல்டிங் நிறுவனத்தின் உரிமையாளர்களின் அனுசரணையுடனும் இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அம்பாறை பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவ சேவை மற்றும் ஆலோசனைகளுடன், விசேட வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலோடு நடைபெற்ற இம்முகாமில் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
இதனுடன் இணைந்ததாக பொதுமக்களின் பார்வைத் தேவையை கருத்திற்கொண்டு ரூ.6,00,000-க்கும் அதிகமான பெறுமதியுடைய மூக்குக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. இச்சேவை AFRON ஹோல்டிங் நிறுவன நிர்வாகிகள், ஆயுர்வேத வைத்தியர் சஞ்சீவனி, வைத்திய உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மருத்துவ சேவை தொடரும்
நிகழ்வில் உரையாற்றிய கௌரவ. வெள்ளையன் வினோத்காந்த் தெரிவிக்கையில்,
“வாய்ஸ் ஒப் ஃபியூச்சர் அமைப்பினால் நான்காவது முறையாக இடம்பெறும் இந்த மருத்துவ முகாம் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இன்று ஆயுர்வேத மருந்துகளுடன் இலவச மூக்குக்கண்ணாடிகளையும் வழங்கி வருகின்றோம். அதிகமான பயனாளிகள் மற்றும் நோயாளர்கள் மருத்துவ சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்துள்ளனர்.
வாய்ஸ் ஒப் ஃபியூச்சர் அமைப்பின் அங்கத்தவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் இந்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலப் பணிகள் சிறக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பல சிரமங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் இடம்பெறும் இத்தகைய மருத்துவ முகாம்களை எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக நடத்துவதற்கான திட்டங்களை நாம் வகுத்துள்ளோம்.
இந்த சந்தர்ப்பத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு. மாஹிர் அவர்களுக்கும், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு. நிஷாந்த் அவர்களுக்கும், புதிய வளத்தாப்பிட்டி பிரஜாசக்தி அமைப்பின் தலைவர் திரு. ஏ.கே.பி. சாந்தகுமார் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, AFRON ஹோல்டிங் நிறுவனத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
நிகழ்வின் பிரதம அதிதியாக சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு. W.À. நிஷாந்த பிரதீப்குமார் கலந்துகொண்டதுடன், சம்மாந்துறை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி திரு. A.D.R. விஜேவர்த்தன உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும், புதிய வளத்தாப்பிட்டி பிரஜாசக்தி அமைப்பின் தலைவருமான A.K.P. சாந்தகுமார் கலந்து சிறப்பித்தார்.
மேலும், வாய்ஸ் ஒப் நேச்சர் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் அழகிரி ஆனந்தராஜ் (கண்ணன்), செயலாளர் ரத்னவேல் ரஞ்சித், லபொருளாளர் ராஜேந்திரன் நதீசன் ஆகியோரும், இணை அனுசரணை வழங்கிய- மாற்றத்திற்கான மாணவர் அமைப்பின் தலைவர் செல்வமணி பிரவீன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
அத்துடன், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன் ஏ. நபார், சார்ஜன்ட் டபிள்யூ.ஏ. சிந்தக ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வாய்ஸ் ஒப் ஃபியூச்சர் ஸ்ரீலங்கா அமைப்பின் நிறைவேற்று பிரதிநிதிகள் மற்றும் அங்கத்தவர்களான சுந்தரலிங்கம் சுஜீவன், ஜீவன் பிரகாஷ், நாகராஜா ஆகாஷ்ராஜ், முருகையா சுவேந்திரன், மோகன் பிரகாஷ், சந்தனம் ஆனந்த ரூபன், ராஜேந்திரன் நதீஷ்குமார், ராமையா தேவராஜன், கவிந்தன், நாகேந்திரன் அஷான், காளிமுத்து கர்ணா, செல்லத்துரை செந்தூரன், ஆனந்தராஜ் புவி, சங்கர் அபி, ஜெயகணேஷ் துசி உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
அதேபோன்று, மாற்றத்துக்கான மாணவர் அமைப்பின் செயற்பாட்டு பிரிவு உறுப்பினர்களான செல்வி. ஆர். ஹம்சாயினி, செல்வி. எஸ். ஹனோச…