Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

லிந்துலை   மவுசா எல்ல தமிழ் வித்தியாலயம் கல்விச் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது!

September 16, 2026

நீதிமன்றத்தில் ஆஜரானார் ஞானசார தேரர்: வழக்கு செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

September 16, 2026

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று அதிகாலை சிங்கப்பூர் பயணம்!

September 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு கூடியது
இலங்கை

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு கூடியது

ThanaBy ThanaSeptember 15, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு கூடியது

– மழை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை செயலமர்வுகள்

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழுவு மற்றும் அதிகாரிகள் குழு, ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) பிற்பகல் ஒன்றுகூடியது.

எல்-நினோ காலநிலைத் தாக்கமானது வறட்சியான நிலையிலிருந்து எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மழையுடன் கூடிய காலநிலைக்கு மாறவுள்ளதால், அதற்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மழையினால் ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், அத்தகைய அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்கள் எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பான அனர்த்த முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்துவதற்கும் குழு கவனம் செலுத்தியது.

மண்சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும் கண்டி, பதுளை, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு அதற்குரிய ஆரம்ப முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்துவதற்கும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு இதன் போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் செயற்பாட்டு அறைகளை செயற்படுத்துவதன் மூலம் மக்களை முற்கூட்டியே தயார்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், எல் நினோ காலநிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரணப் பணிகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, விசேட அமைச்சரவை உபகுழுவின் செயலாளர்/அழைப்பாளர், அதிகாரிகள் குழுவின் தலைவர்/ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ. விக்ரமசிங்க, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னகே, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி காமினி ஜெயதிஸ்ஸ, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் டீ. பாரதிதாசன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    லிந்துலை   மவுசா எல்ல தமிழ் வித்தியாலயம் கல்விச் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது!

    September 16, 2026

    நீதிமன்றத்தில் ஆஜரானார் ஞானசார தேரர்: வழக்கு செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

    September 16, 2026

    ஷிரந்தி ராஜபக்ஷ இன்று அதிகாலை சிங்கப்பூர் பயணம்!

    September 16, 2026

    தித்வா புயலினால் சேதமடைந்த ப்ளக்பூல் – ஹோட்டன் சமவெளி வீதியை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

    September 16, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.