2025 நவம்பர் மாத இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட தித்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ப்ளக்பூல் அம்பேவெல பட்டிபொல ஹோட்டன் சமவெளி (B512) (5+ 200 கிலோமீற்றர் தொடக்கம் 12 + 000 கிலோமீற்றர் வரை) வீதியை புனரமைப்பதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காக 04 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர் உயர்மட்ட பெறுகைக் குழுவால் வழங்கப்பட்டுள்ள விதப்புரைகளின் அடிப்படையில் கணிசமானளவு பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான M/s Asset Engineering (Pvt) Limited இற்கு 791.68 மில்லியன் ரூபாய்களுக்கு (வரி இல்லாமல்) வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
