நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட லிந்துலை மவுசா எல்ல தமிழ் வித்தியாலயம் கல்விச் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது!
அடிப்படையான வசதிகள், முறையான கட்டிடங்கள், வகுப்பறைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் என எவ்வித முறையான வசதிகளுமமின்றி, பல சவால்களுக்கு மத்தியில் இயங்கும் இப்பாடசாலை, அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100% சித்தியைப் பெற்று (அனைத்து மாணவர்களும் சித்தி) மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதோடு, வெட்டுப்புள்ளிக்கு மேல் ஒருவர் பெற்று தமது சாதனைப் பயணத்தை கம்பீரமாகத் தொடங்கியுள்ளனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டித் தந்ததில் முக்கிய பங்காற்றிய:
* அதிபர் திருமதி N. நளினி அம்மையார் அவர்களுக்கு,
* மாணவர்களை மிகச் சிறப்பாகத் தயாரித்த வகுப்பாசிரியர் திருமதி A. ஜெசிந்தா ஆசிரியர் அவர்களுக்கு,
* மற்றும் இச்சாதனைக்குப் பின்பலமாக நின்று அனைத்து வகையிலும் உதவிய பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும் உரித்தாகட்டும்!
— பாடசாலை சமூகம்
#MousakEllaSchool #ScholarshipSuccess #NuwaraEliyaEducation #ProudMoment #TamilSchoolAchievement

