ப்ரொட்டெக் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தை முன்னிட்டு, வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை சட்டபூர்வமாகுதல் மற்றும் முறைசாரா தொழிற்துறை ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுத்தல் அவர்களின் சமூக பாதுகாப்பு திட்டங்களை உருவாக்கக் கோரி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் பேரணியும் நேற்று (01) ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் இருந்து பஸ் தரிப்பிடம் வரை சென்றது.

சுமார் 200க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். கருப்பையா மைதிலி ப்ரொட்டெக் சங்கத்தின் உப தலைவியின் தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

