க/கலைவாணி தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி கடந்த 04.05.2023 அன்று பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி சுசிலா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது இடம்பெற்றது.

குறித்த போட்டிக்கு கம்பளை வலய பணிப்பாளர் எஸ்.உமேஸ்நாதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.மேலும் உதவி கல்வி பணிப்பாளர்களான திருமதி எம் .இந்ராணி ,திரு .ரிச்சர்ட் சேவியரும் கலந்துகொண்டனர்.
அதேவேளை பிரதேச பொலிஸ் அதிகாரிகள், பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.கொலம்பியா, அப்பலோ,டிஸ்கவரிஆகிய மூன்று இல்லங்களில் டிஸ்கவரி முதலாமிடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
