அமரர் லெனின் மதிவாணனின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஹட்டன் கார்பெக்ஸ் தமிழ் வித்தியாலய கல்வி பொது சாதாரண தர மாணவர்களுக்கு கணித பாட இலவச கருத்தரங்கு இன்று (07.05.23) ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த இலவச கருத்தரங்கை அமரர் லெனின் மதிவாணனின் குடும்பத்தார் ஒழுங்கு செய்திருந்தனர்.
நிகழ்வில் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் மாணவர்களுக்கான கையேடுகள் மற்றும் சிற்றுணவுகளும் அவர்களால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

