உணவு விஷமடைந்தமையினால் மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மாணவர்கள் மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவர்கள் இன்று (28) காலை உணவை உட்கொண்ட பின்னர் இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
