மாத்தளை மாவட்டத்திலுள்ள பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பஸ் மற்றும் வேன்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அண்மையில் மாத்தளை சுற்றுலா ஹோட்டல் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த வேலைத்திட்டமானது, மாத்தளை மாவட்ட பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் மற்றும் பொலிஸாரால் ஒருங்கமைக்கப்பட்டிருந்தது.
இதன்போது பாடசாலை போக்குவரத்து சேவைகளில் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
