மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.20.07.2023.
அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தின் தோட்ட முகாமையாளரினால் மூடி கிடக்கும் வீடுகளை தோட்ட முகாமையாளருக்கு கையளிக்குமாறு ஒட்டப்பட்ட அறிவித்தல்களை அடுத்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், இன்றைய தினம் இவ்விடயம் தொடர்பாக அக்கரப்பத்னை பிலோன்டேசன் பொது முகாமையாளர் அவர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாடியபோது,
நீண்ட காலமாக வீடுகள் இல்லாதவர்கள் அவ்வீடுகளை தருமாறு முறையிட்டு கூறியதாகவும், இரு சிலர் வீடுகளை வெளி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும், சில வீடுகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக அவருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து இவ்வாறான ஒரு விளம்பரத்தை ஒட்டியதாக கூறினார்.
வீட்டின் உரிமையாளருக்கோ, வீட்டை பூட்டி விட்டு வெளியில் இருப்பவருக்கோ இதன் ஊடாக எந்த வித தொந்தரவோ பிரச்சினைகள் ஏற்பட போவதில்லை என்றும் விபரங்களை திரட்டுவதற்காக மாத்திரமே இவ்வாறு செய்தேன் என்று அவர் கூறியதற்கு அமைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடமல் இவ்வாறு செய்ய முடியாது என்றும் தொழில்சங்க சட்டங்களுக்கு புரம்பாக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொளள்ள வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்தத்துடன், இந்த விளம்பரம் தொடர்பாக எவருக்காகவது பிரச்சினைகள் இருக்குமானால் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
