பசறை மீரியபெத்தயில் வீடொன்றை உடைத்து நகை மற்றும் பணம், வங்கி ATM அட்டை ஆகியவற்றை திருடியதாக சந்தேகப்படும் நபர் ஒருவர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17 ம் திகதி மீரியபெத்த பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் வீட்டுக் கதவை உடைத்து அலுமாரியில் இருந்த 2 லட்சம் ரூபாய் பெறுமதியான சங்கிலி ஒன்றும் 7000 ரூபாய் பணமும் வங்கி ATM அட்டையும் திருடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய உடன் விசாரணைகளை மேற்கொண்டு பசறை பொலிஸார் 33வயதுடைய மீரியபெத்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருடப்பட்ட ATM அட்டையில் இருந்து ATM அட்டையில் இருந்து மேலும் 50000 பணம் பெறப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
