பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகள் குறித்தும் கண்டறிய விரிவான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன் நுகர்வோர் சேவை அதிகாரிகள், பிரதேச மட்டதில் வியாபாரிகளுக்கு அறிவித்தல் வழங்கி, பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாகவும், பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஷான்த கிரிஎல்ல குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரம் முதல் இந்த நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.