4500 மில்லிகிராம் ஹெரோயினுடன் இலக்கம் 27 ஹெபராவ மஹியங்கனனையில் வசிக்கும் 32 வயதுடைய
நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் இலக்கம் 83/1, கோவிலயா, பதியத்தலாவ வீதி, மஹியங்கனை என்ற முகவரியில் வசிக்கும் 25 வயதுடைய ஒருவரிடம் இருந்து 120 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதோடு மேட் குறிப்பிட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி திரு.பிரபோப விஜேரத்னவின் பணிப்புரையின் பேரில் போதை ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் இருவரையும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா