Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

August 4, 2026

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

August 4, 2026

மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையகம் – 200 விழா, மலையக கல்வி அபிவிருத்தி, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை
இலங்கை

மலையகம் – 200 விழா, மலையக கல்வி அபிவிருத்தி, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை

ThanaBy ThanaJuly 29, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் – 200 விழா, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை, மலையக கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் மரியாதை நிமித்தம் இன்று (29.07.2023) காலை  நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில், கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது தமிழக அரசாங்கம் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பாரிய அரிசி தொகையினை நன்கொடையாக வழங்கியிருந்தது. இதற்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் துணைத் தூதர் டாக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

அமைச்சரின் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என முதல்வரிடம் குறிப்பிட்ட ஜீவன் தொண்டமான், இவ்விவகாரம் சம்பந்தமாக இலங்கை அமைச்சரவையிலும் பேசவுள்ளதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

மலையக கல்வி அபிவிருத்தி சம்பந்தமாக தமிழக அரசிடம் 4 கோரிக்கைகளை முன்வைத்த ஜீவன் தொண்டமான், மலையக மாணவர்களுக்கு தமிழகத்திலும் பட்டப்படிப்பை நிறைவுசெய்வதற்கான புலமைப்பரிசில் திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்களின் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய – வழங்கி வரும் பங்களிப்பை பாராட்டும் வகையில் அவர்களின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான மலையகம் – 200 விழா அரச அனுசரணையுடன் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ளமை பற்றியும் தமிழக முதல்வருக்கு, ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தினார்.

மேலும், கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு பல உதவி திட்டங்கள் வழங்கப்பட்டது. அதையும் நினைவுகூர்ந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் தொடர்ந்தும் தி.மு.க அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026

    கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நோர்ட்டன் பகுதியில் பதிவு

    August 4, 2026

    மத்திய மாகாணத்தில் நாளை பாடசாலைகள் மீண்டும் திறப்பு: கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு

    August 4, 2026
    Editors Picks

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026

    கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நோர்ட்டன் பகுதியில் பதிவு

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.