Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இறம்பொடை, புளூபீல்ட் தோட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த தொழில் பிணக்குகளுக்கு தீர்வு
மலையகம்

இறம்பொடை, புளூபீல்ட் தோட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த தொழில் பிணக்குகளுக்கு தீர்வு

ThanaBy ThanaAugust 11, 2023Updated:August 11, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இறம்பொடை, புளூபீல்ட் தோட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த தொழில் பிணக்குகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வேலைக்கு செல்வதற்கு தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இறம்பொடை, புளூபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் பல மாதங்களாக பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். தமக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன செலுத்தப்பட வேண்டும், சேவைக்கால கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட தொழில்சார உரிமைகளை கோரியே போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சில்  (09.08.2023) அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொது செயலாளர் செல்லமுத்து, புளூபீல்ட் தோட்ட உரிமையாளர், தோட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை செலுத்துவதற்கு தோட்ட நிர்வாகம் உடன்பட்டுள்ளது, சேவைக்கால கொடுப்பனவும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொழிலாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகள் மீளப்பெறப்படும் எனவும் நிர்வாக தரப்பால் கூறப்பட்டுள்ளது. எனவே, திங்கட்கிழமை முதல் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வார்கள் என தோட்ட தலைவர்கள் கூறினர்.

அத்துடன், புளூபீல்ட் தோட்ட மக்கள் தொடர்பில் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தோட்ட மக்களின் பிரச்சினை, அவர்களுக்கான உரிமைகள் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    கனடா, டொரோண்டோ உலகத் தமிழ் ஆய்வு மாநாடு – 2026 இல் ஆய்வாளர், அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரை இடம்பெறவுள்ளது.

    October 14, 2026
    Editors Picks

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.