Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

“மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

August 4, 2026

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

August 4, 2026

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையக மக்களுக்கு விரைவில் காணி உரிமை கிடைக்கும்
மலையகம்

மலையக மக்களுக்கு விரைவில் காணி உரிமை கிடைக்கும்

ThanaBy ThanaAugust 11, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நான்கு அமைச்சுகளின் செயலாளர்கள் இணைந்து இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, விரைவில் காணி உரிமை கிடைக்கும்.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக மக்கள் தொடர்பில் உறுப்பினர்கள் அனைவரும் அக்கறையுடன் கருத்துகளை முன்வைத்தனர். சிலர் அரசியல் இலாபம் கருதி கருத்துகளை முன்வைத்திருந்தாலும், மலையக மக்கள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றதற்காக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்றைய விவாதத்தை அவதானித்தபோது மலையக மக்களுக்கு விரைவில் காணி உரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. காணி அமைச்சர், தொழில் அமைச்சர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோருடனும், ஜனாதிபதியுடனும் இது சம்பந்தமாக பேச்சு நடத்தியுள்ளேன். எனது அமைச்சின் செயலாளர் உட்பட மேற்படி அமைச்சுகளின் செயலாளர்கள் நால்வரும் ஒன்றிணைந்து 10 பேர்ச்சஸ் காணிக்குரிய ஏற்பாட்டை செய்யவுள்ளனர்.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தம்மை இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்தினால் அது பிரச்சினைகளை மூடிமறைப்பதாகிவிடும். கலாசார ரீதியில் நான் மலையகத் தமிழன். சட்ட ரீதியில் இந்திய வம்சாவளி தமிழர். எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது மக்கள் இம்முறை விழிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் தோட்டங்களில் வாழ்பவர்கள்தான் மலையக தமிழர்கள், ஏனையோர் இலங்கை தமிழர்கள் எனக் கருதி சில அதிகாரிகள்,  தவறிழைத்துவிட்டனர்.

அதேவேளை, ஜனாதிபதி நாளை மலையக எம்.பிக்களை சந்திக்கின்றார். இதில் பங்கேற்குமாறு முற்போக்கு கூட்டணியினரை அழைக்கின்றேன். இது சிறந்த வாய்ப்பு. நானும், ரமேசும் பங்கேற்பது சிக்கல் எனில் நாங்கள் பின் வரிசையில் அமர்ந்தாவது கூட்டத்தில் பங்கேற்கின்றோம். கூட்டணியினர் வரவேண்டும்.” – என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026

    கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நோர்ட்டன் பகுதியில் பதிவு

    August 4, 2026

    மத்திய மாகாணத்தில் நாளை பாடசாலைகள் மீண்டும் திறப்பு: கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு

    August 4, 2026
    Editors Picks

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.