எல்ல சின்ன சிறிபாத பகுதியை பார்வையிட சென்ற 27 வயதுடைய இங்கிலாந்து நாட்டு பிரஜை ஒருவர் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவதியுற்ற நிலையில் அயலவர்களினால் 1990 அவசர காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவு வண்டியில் இங்கிலாந்து நாட்டு பிரஜைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா


