அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

