அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான லஹிரு திரிமான்னவின் கோரிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ஏற்றுக் கொண்டுள்ளது.
லஹிரு திரிமான்னவின் இராஜினாமாவை அதன் நிர்வாகக் குழு ஏற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
தனது நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, இலங்கை கிரிக்கெட்டுக்கு லஹிரு திரிமான்ன கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயற்குழு கூட்டத்தின் போது, குறித்த இராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
லஹிரு திரிமான்ன இலங்கைக்காக 44 டெஸ்ட், 127 ஒருநாள் மற்றும் 26 டி-20 போட்டிகளில் விளையாடி, 5,573 சர்வதேச ஓட்டங்களை குவித்துள்ளார்.

