மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.20.08.2023.
நல்லதண்ணி வழியாக சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் பாரிய பீதீயின் மத்தியில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய பயணிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியாயினும் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாதமலை க்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது நாக தீப பௌத்த விகாரையில் அமைக்க பட்டு உள்ள முப்பது அடி உயரம் கொண்ட புத்தர் சிலையிலும் அச் சிலைக்கு அமைத்து உள்ள உயர்ந்த மண்டபத்திலும் 27 சிரிய பெரிய குளவி கூடுகள் உள்ளன.
தற்போது இந்த பகுதியில் கடுமையான வெப்பமான காலநிலை தோன்றியுள்ளது அத்துடன் அதிகளவில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் சிவனடி பாத மலைக்கு செல்வதால் காகங்கள், கழுகு போன்ற பறவைகள் குளவி கூடுகளை தாக்கும் பட்சத்திலும் கடும் காற்று வீசும் வேலையில் குளவி கூடுகள் களைந்து வீதியில் செல்வோரை தாக்கலாம்.
ஆகையால் சம்பந்தப்பட்ட பௌத்த விகாரையின் மத குரு மற்றும் நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் முன் வந்து அந்த குளவி கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை என்றால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பலர் என் நேரத்திலும் குளவி கொட்டுக்கு இலக்குகாக கூடும் என அப் பகுதியில் உள்ள அனைத்து உல்லாசவிடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


