தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த (01/08)பெண்னின் சடலம் நேற்று (22) அவரது கணவர் மற்றும் உறவினர்களால் அடையாளங் காட்டப்பட்டுள்ளது .
உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக லிதுலை பொலிஸார் பெண்ணின் கைரேகைகளை பெற்று கைரேகைகளை பொலிஸ் திணைக்களத்தின் கைரேகை பதிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸ் பரிசோதகர் சிசிர குமார தெரிவித்தார்.
தங்கல்ல கிரிந்து பிரதேசத்தில் வசித்து வந்த ஜுனைட் கிரிஷானி என்ற 36 வயதுடைய பெண் ஒருவரே கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என் .உருத்திசெய்யப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்த பெண் தனது கணவரை பிரிந்து வேறு சிலருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும், உயிரிழந்த பெண்ணின் சட்டப்பூர்வ திருமணத்தில் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் லிந்துலை பொலிஸாரின் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணை கிரேட் மேற்கு மலை உச்சிக்கு கொண்டு வந்த குழுவினரை கைது செய்ய லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜுனைட் கிரிஷானியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
