தலைமன்னார் – கொழும்பு கோட்டைக்கும் இடையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் தலைமன்னார் துறையிலிருந்து அதிகாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு காலை 10.34 மணிக்கு கோட்டை நிலையத்தை அடையும்.
இதேவேளை, மற்றொரு ரயில் மாலை 3.35 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு இரவு 10.48 மணிக்கு தலைமன்னார் துறையை சென்றடையும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட இரண்டு முதல் வகுப்பு பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் மற்றும் இரண்டாம், மூன்றாம் வகுப்பு சாதாரண பெட்டிகள் அடங்கும்.