அரவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துனுகேவல, மஹகமாராவில் பகுதியில் கட்டு
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹகமாரா, துனுகேவெல பகுதியைச் சேர்ந்த 61 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நேற்று (18) மதியம் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விறகு வெட்டச் சென்றதாகவும், காட்டுக்குள் கட்டு துப்பாக்கி சுட்டுக்கு இலக்காகி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டு துப்பாக்கி சுட்டுக்கு இலக்காகி காயமடைந்த நபரை பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு. சிகிச்சை அளிக்கப்பட்டட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் பிபில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் எவரும் கைதுசெய்யபடவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்
அரவ பொலிஸ் நிலையப் பொலிஸ் பரிசோதகர் பண்டார தலைமையில் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா