மாளிகாவத்தை எச்.ஆர் ஜோதிபால மாவத்தை பிரதேசத்தில் குறித்த நபர் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் கொழும்பு 08, பேஸ்லைன் வீதி பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த 20 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்