பண்டாரவளை எல்ல பகுதிக்கு சுற்றுலா வந்த ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்த23,23 வயதுடைய இரண்டு பெண்கள் எல்ல புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் நேற்று மாலை உந்துருளியில் செல்கையில் கட்டுப்பாட்டை இழந்து உந்துருளி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
உந்துருளி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இரண்டு பெண்களும் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு 1990 காவு வண்டி மூலம் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ராமு தனராஜா