கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்றைக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த நாளை (21) வெளியிடவுள்ளார்.
இதுதொடர்பாக பாராளுமன்றில் இன்று பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், நாளை பாராளுமன்றில் வைத்து இதுகுறித்த விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும் சுசில் பிரேமஜெயந்த கூறினார்.
இம்முறை நடத்தப்பட வேண்டிய உயர்தரப் பரீட்சைகள் அடுத்த ஆண்டுவரையில் ஒத்திவைக்கப்படலாம் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.