ஐக்கிய நாடுகளின் சபையில் 78 ஆவது கூட்டத்தொடரில் அதிமேதக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன் இலங்கையையும் விசேடமாக மலையகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டமைக்கு நான் மகிழ்வடைகின்றேன்.என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ்.
மிக முக்கியமாக இக்கூட்டத்தொடரின் போது உலகத் தலைவர்களையும் ராஜதந்திரிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவ்வகையில்
உலக வங்கியின் தலைவர் மற்றும் ஈரான் நாட்டின் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்திருந்தது.
அதிமேதகு ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பெயரில் இலங்கையில் பண்டாரவளையில் உமா ஓயா வேலைத்திட்டத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தருவதாக ஈரான் நாட்டின் ஜனாதிபதி உறுதியளித்திருந்தமை சிறப்பு மிக்க விடயமாகும் .
மேலும் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட உலக வங்கியின் தலைவரும் பாராட்டினை தெரிவித்ததோடு நாட்டினுடைய எதிர்கால முன்னேற்றத்திற்கு பங்களிப்பு தருவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இங்கு நடைபெற்ற பிரதி குழுக்கள் கூட்டங்களில் பெருந்தோட்ட மலையக மக்கள் தொடர்பிலும் 200 வருடமாக மலையக மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரம் நெருக்கடி ,உரிமைகள் தொடர்பிலும் அபிவிருத்தி வேலை திட்டங்கள் தொடர்பிலும் சுட்டிக் காட்டி இருந்தேன் .எதிர்காலத்தில் இலங்கையிலும் குறிப்பாக மலையக மக்கள் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பிலும் நாட்டினுடைய பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் பாரியதொரு மாற்றங்கள் முன்னெடுக்கப்படும் என நான் நம்புகின்றேன் .