கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தினால் (KOICA) முன்னெடுக்கப்படுகின்ற இலங்கையில் ஊடகத்துறைக்கு செயற்றை நுண்ணறிவினை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சிநெறியொன்று தென்கொரியாவில் இரண்டு வாரங்களாக நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர்கள் 15 பேர் குறித்த பயிற்சி நெறியில் பங்குபற்றினர். அதன்போது தெரிவு செய்யப்பட்ட மூன்று தலைப்புகளில் மூன்று செயற்பாட்டு திட்டங்களும் அவர்களால் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொய்க்கா நிறுவனமும், தென்கொரியாவின் ஹெங்யாங் பல்கலைக்கழகமும் இணைந்து முன்னெடுத்த இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு தென் கொரியாவின் உயர் ஊடக கலாச்சாரம் தொடர்பில் சிறந்த அனுபவங்களை பெற்றுக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அதேபோன்று தென்கொரியாவின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பிலும் குறித்த ஊடகவியலாளர்கள் அறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பயிற்சி நெறியின் இறுதியில் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன அவர்களின் தலைமையில் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் அர்ப்பணிப்பினால் இந்த பயிற்சி நெறியினை தொடர்வதற்கு அவ் ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.