பசறை நகரில் நகைக்கடை ஒன்றில் மோதிரங்கள் 2 நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை நகரில் உள்ள நகைக் கடை ஒன்றின் உரிமையாளர் மரண வீடொன்றுக்கு சென்ற வேளை 81 வயதுடைய நகைக் கடை உதவியாளர் மாத்திரம் கடையில் இருந்த வேளை நகை கடைக்கு பிரவேசித்த நபர் ஒருவர் தான் மோதிரங்கள் இரண்டு கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் மோதிரங்கள் இரண்டினை காட்டுமாறு கூறியுள்ளார்.
இதன்போது கடையில் இருந்த உதவியாளர் இரண்டு மோதிரங்களை காட்டி ஒரு மோதிரம் 68000 ரூபாய் எனவும் மற்றைய மோதிரம் 55000 ரூபாய் எனவும் கூறிய போது இரண்டு மோதிரங்களையும் கையில் எடுத்த சந்தேக நபர் பார்ப்பது போல் நடித்து கடதாசி ஒன்றினால் சுற்றிக் கொண்டு கடையை விட்டு சென்றுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதன்போது சந்தேக நபரை கைது செய்யும் முகமாக விசாரணைகளை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரட்ண தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்
ராமு தனராஜா