ஏழ்மையால் சட்ட உதவியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் உங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் நீதி அமைச்சின் அனுசரணையுடன் மனித உரிமைகள் கற்கைகளுக்கான நிலையமானது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் UNICEF ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்துகின்ற நீதித் துறைக்கான அனுசரணைத்திட்டத்தின் மூலம் சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்ற வசதியற்றவர்களுக்கு, சட்ட ஆவணங்களைத் தயாரித்தல், சட்ட நிறுவனங்களுடன் தொடர்புபடுத்துதல் குறித்து தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர்களால் வழங்கப்படவுள்ள இலவசமான சட்ட ஆலோசனை சேவையினைப் பெற்றுக்கொள்ள…
நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டுமே!
1. கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கிய பட்டியலைப் பார்வையிடவும்
2. உங்களுடைய மாவட்டத்திற்குரிய இலக்கத்தினை அடையாளம் காணவும்
3. உங்களுடைய தொலைபேசியை எடுக்கவும்
4. உங்கள் மாவட்டத்திற்குரிய சட்டத்தரணியைத் தொடர்பு கொள்ளவும்