Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாடசாலை வகுப்புகளில் தங்கியிருக்காவிடின் எதிர்காலத்தில் பரீட்சையில் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது – கல்வி அமைச்சர்
இலங்கை

பாடசாலை வகுப்புகளில் தங்கியிருக்காவிடின் எதிர்காலத்தில் பரீட்சையில் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது – கல்வி அமைச்சர்

ThanaBy ThanaOctober 10, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பெற்றோர்கள் தம்மால் முடிந்தளவு சிரமம்பப்பட்டு பிள்ளைகளை மேலதிக வகுப்புகளுக்கே அனுப்ப வேண்டும் என்றால் பாடசாலைகள் காணப்படுவதில் அர்த்தமில்லை – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

புதிய கல்விக் கொள்கையைத் செயற்படுத்துவத்துவதுடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் நான்காம், ஐந்தாம் தரங்களில் வகுப்பறையில் தங்கி இருப்பதனால் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், எதிர்காலத்தில் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருக்கும் செயற்பாடு கட்டாயமாக்கப்படுவதுடன் சகல தரங்களுக்கும் ஏற்றதாக மாணவர்களுக்கு பரீட்சைகளில் சித்தி பெறக் கூடியதாகவும் தினசரி பாடசாலைக்கு வருகை தருவது அத்தியவசியமானதாகவும் அமையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

நிவிதிகல தம்மானந்த நாஹிமி நினைவுப் புலமைப் பரிசில் அடிப்படையில் அயகம பிரிவில் 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு உரையாற்றினார்.

கல்வி எனும் பெயரில் ஒரு மண்டபத்தில் 1500 பிள்ளைகளை ஒன்று சேர்த்து உரையாற்றவதன் ஊடாக வெற்றியளிக்கக்கூடியதான செயற்பாடு அல்ல என்பதுடன், பிள்ளைகளின் ஒழுக்கத்தை உருவாக்கும், பல்திறன் மற்றும் தொழில்நிபுணத்துவ அபிவிருத்திக்காக முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் ஆரம்ப வகுப்புகளில் பிள்ளைகளை அவ்வாறான விரிவுரைகள் இடம்பெறும் மேலதிக வகுப்பு முறைகளுடன் தொடர்புபடுத்துவது எவ்விதத்திலும் பயனில்லை என்றும் குறிப்பிட்டார்.

கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் அவசியமான உதவியைப் பெற்றுக்கொள்வதில் தவறில்லை ஆனால் அவை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் வரை பரந்து காணப்படும் நிலைமை இல்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக அனுபவங்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ள பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் மேலதிக வகுப்புகளுக்காக பாரிய நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டிய கஷ்ட நிலையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அவ்வாறில்லாவிடின் ஆசிரியப் பயிற்சிகளை நடாத்தி அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கிக்கொண்டிருக்கும் போது பௌதீக மற்றும் ஆளணி வள அபிவிருத்தியை மேற்கொண்டு பாடசாலைகளை நடாத்தும் இலவசக் கல்வி நோக்கம் மருவிச் செல்வதாகவும் அவ்வாறு பாடசாலைகளை நடாத்த்துவதில் அர்த்தமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உலகின் எந்தவொரு நாட்டிலும் இந்த நிலை காணப்படவில்லை என்றும் முன்பள்ளி சிறுவர் கல்வி தொடர்பாக மேற்கொள்ளப்படும் கொள்கை மற்றும் அளவீடுகள் முற்று முழுதாக மாற்றப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாகவும் அதில் பூரண மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் வெட்டுப் புள்ளிக்கு அதிகமாகப் பெற்றுக் கொள்வதில்லை என்றும் தடைதாண்டல் புள்ளிக்கான தீர்மானத்தை அரசாங்கத்தினால் வருடத்திற்கு மாணவர்களுக்கு வழங்கக் கூடிய புலமைப்பரிசில் நிதியத்தின் அளவிற்கேற்ப மேலும் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியுமாயின் புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி மேலும் குறையலாம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் அப்புள்ளிகளின் அடிப்படையில் பிள்ளைகளை அளவிடுதல் நியாயமற்றதாக வலியுறுத்திய அமைச்சர் பிரபலப் பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படும் வாய்ப்புக்களை வழங்குவதற்காக கிடைக்கப்பெறும் இந்தப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தற்போது அப்பாடசாலைகளில் காணப்படும் பிள்ளைகளை பரிந்துரைத்தல் அர்த்தமற்ற செயற்பாடு என்றும் அதனால் தற்போது காணப்படும் பரீட்சைப் போட்டி மேலும் ஊக்குவிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தினார்.

அவ்வாறே உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரியில் நடாத்தப்படவுள்ள பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளை நடாத்துவதற்கு உத்தேசிப்பதுடன் அடுத்த வருடத்தினுள் தவர விடப்பட்ட சகல பாடங்களும் கற்பித்து பூரணப்படுத்தப்படும். அத்துடன் அதற்குப் பொருத்தமாக விடுமுறைக் காலம் குறைவடைவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இளைஞர்களின் சனத்தொகைக்கு ஏற்றாற் போல் நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் எதிர்காலத்தில் நாட்டிற்கு மேலும் சுமை அதிகரிக்கலாம்.

இவ்வாறான சகல பிரச்சினைகளையும் வெற்றி கொள்வதற்காக முறையான பொருளாதார மற்றும் கொள்கை உள்ளடங்களான நிருவாக முகாமைத்துவம் காணப்பட வேண்டும். இதன்போது எப்போதும் நிதி அவசியமற்றதாகக் காணப்படுவதுடன் மனப்பாங்கு மாற்றம் போதுமானதாகக் காணப்படும் என்றும் அமைச்சர் விபரித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.