முல்லேரியா, அம்பத்தலை பகுதியில் நேற்று (10) காலை தந்தையும் மகளும் அசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தந்தை-மகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சாலையில் நின்ற ஒருவரால் இந்த அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால், படுகாயமடைந்த தந்தை கொழும்பு கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
