யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் யாசகம் பெறும் ஒருவர் அந்த ஆலயத்தினுடைய புனரமைப்பு பணிக்கு 02 இலட்சம் ரூபாய் நிதி உதவியினை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக யாசகம் பெறும் பாபுஜி என்ற நபரே இவ்வாறு ஆலய புனரமைப்பிற்காக நிதி உதவியினை வழங்கியுள்ளார்.
ஆலயத்தில் யாசகம் பெறும் பணத்தில் மேலதிகமாக சேமித்து வைத்திருந்த சுமார் 02 இலட்சம் ரூபாய் பணத்தினை அவர் ஆலய நிர்வாகத்திடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
