தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பம் தொலைபேசி கம்பம் மற்றும் மதில் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தெனியாய கொழும்பு பிரதான வீதியில் வாந்துவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து நடத்துனர் பாரிய காயங்களுடன்
பானதுறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
