பிட்டிகல – அமுகொடை பகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு, வாள் மற்றும் பொல்லுகளினால் தாக்கி ஒருவரை கொலை செய்து மேலும் ஒருவரை காயப்படுத்திய கொலை குற்றச் செயல்கள் தொடர்பாக பலப்பிட்டி மேல் நீதிமன்றில் நீண்ட விசாரணை இடம்பெற்று வந்தது.
இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் மீதான குற்றும் நேற்று நிரூபிக்கப்பட்ட நிலையில் மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை, மொரட்டுவை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது