கொழும்பில் இன்று (24) 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று (24) மாலை 5 மணி முதல் நாளை (25) முற்பகல் 9 மணி வரையான 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
