இன்று (27 திங்கட்கிழமை) முதல் அடுத்து வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டு எதிர்வு கூறியுள்ளது.
அந்த அறிக்கையின்படி கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது.
