வெல்லவாய எல்ல பிரதான வீதியில் பாரிய மண் சரிவு குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல்.
வெல்லவாய – எல்ல பிரதான வீதியின் ராவணா எல்ல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு இன்று காலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மண்சரிவு காரணமாக வெல்லவாய – எல்ல பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
