மஸ்கெலியா விசேட நிருபர்.
அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளமையால் இன்று காலை முதல் மேற்க்கொள்ளப்பட்டு வந்த பகிஷ்கரிப்பு மாலை நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் மூவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) மாலை தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில் இன்று இதுவரை தாக்கிய மூவர் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த முரண்பாடுக்கு பிரதானமாக செயற்பட மேலும் மூவரை கைது செய்ய கோரி தாக்கிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நுவரெலியா சாலை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் திடீர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த முரண்பாடுக்கு பிரதானமாக செயற்பட மூவரையும் இன்றைய தினம் பொலிஸரால் கைது செய்யப்பட்டதை அடுத்தே பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
எனினும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதிமன்றத்தில் வலப்பனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
