அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த 05ஆம் திகதி இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதன் போது பிரேத பரிசோதனையின் போது சட்ட வைத்தியரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
