இன்று (10) காலை நமுனுகுல பூட்டாவத்த பகுதியில் பொத்குல் ஓயாவில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் குழியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மொனராகலை அலியாவத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நமுனுகுல பூட்டாவத்தையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்ததாகவும், மேலும் இரு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது ஆழமான குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நமுனுகுல பொலிஸார் முன்னெடுப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
