Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நீர்வழங்கல் துறையில் இடம்பெற்றுவரும் மறுசீரமைப்புகளை வரவேற்ற உலக வங்கி குழுவினர்
இலங்கை

நீர்வழங்கல் துறையில் இடம்பெற்றுவரும் மறுசீரமைப்புகளை வரவேற்ற உலக வங்கி குழுவினர்

ThanaBy ThanaDecember 12, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் பிரதானிகளுள் ஒருவரான சரோஜ் குமார் ஜா தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை  (11.12.2023) சந்தித்து பேச்சு நடத்தினர்.

கொழும்பு, கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இலங்கையில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தடையின்றி நீரை விநியோகிப்பதற்கும் ஒரு இளம் அமைச்சராக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் பற்றி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், நீர்வழங்கல் தொடர்பான அனைத்து அரச திணைக்களங்கள், அரச நிர்வாக பொறிமுறை மற்றும் தனியார் துறையை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தனி அலகொன்றை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் முடிவடையும் தறுவாயில் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அதன் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் சம்பந்தமாகவும் எடுத்துரைத்தார்.

அதேபோல எதிர்கால திட்டங்கள் பற்றியும், அதற்கு உலக வங்கியின் பங்களிப்பு, ஒத்துழைப்பு, ஆலோசனை அவசியம் எனவும் உலக வங்கி தூதுக்குழுவினரிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்வழங்கல் துறையில் இடம்பெற்றுவரும் மறுசீரமைப்புகளை வரவேற்ற உலக வங்கி குழுவினர், அமைச்சருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

உலக வங்கியின் உதவியுடன் நீர்வழங்கல் துறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள், அவற்றின் முன்னேற்றங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்தாடல் இடம்பெற்றது.

ஐ.நாவின் நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்துக்குள் சுத்தமான குடிநீர் இலக்குக்கும் பிரதான இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு அமைச்சால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு தொடரும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, அமைச்சின் செயலாளர் எஸ். சமரதிவாகர, ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க, சமூக நீர்வழங்கல் திணைக்கள தலைவர், வசீப் நீர் திட்டத்தின் பொறியியலாளர்,  பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, பணிப்பாளர் லால் பெரேரா, உலக வங்கியின் பிரதிநிதிகள், பிரத்யேக செயலாளர் மொஹமட் காதர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

ஊடக செயலாளர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

    August 10, 2026
    Editors Picks

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.