பத்தரமுல்லையில் உள்ள வோட்டஸ் எட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் Christmas Tree Lighting Ceremony அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள வோட்டஸ் எட்ஜ் ஹோட்டல் இதை ஏற்பாடு செய்தது. வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் இது நடைபெறும்.
இந்த நிகழ்வில் வோட்டஸ் எட்ஜ் ஹோட்டலின் முகாமையாளர் மலித் பெரேரா, முகாமையாளர் (வர்த்தகம்) துசித ரணதுங்க, நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
புகைப்படம் – வோட்டஸ் எட்ஜ் ஹோட்டலின் தலைவர் மலித் பெரேரா அவர்கள் நத்தார் மர விளக்கேற்றும் நிகழ்வை (Christmas Tree Lighting Ceremony) ஆரம்பித்து வைத்து தீபங்களை ஏற்றி வைத்தார்.
முனீரா அபூபக்கர்
2023.12.12
