சிலாபம் – அம்பகதவில பாடசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இன்று (12) காலை மாணவர்கள் இருவரும் பாடசாலையின் நுழைவாயிலில் ஏறி விளையாடிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுழைவாயிலோடு இணைந்த மதில் இதன்போது இடிந்து வீழ்ந்துள்ளது. காயமடைந்த மாணவர் ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
