பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை சலுகை விலையில் வழங்கும் வேலைத்திட்டத்தை அச்சகத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
(13) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதன்படி குறித்த பாடசாலை அதிபர்களின் தலையீட்டுடன், இதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பாடசாலை மாணவர்களின் அப்பியாசக் கொப்பிகளின் அதிக விலை குறித்து இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துரையாடியதாகவும், அதன்படி சலுகை விலையில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தேலும் தெரிவித்தார்.