2023ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 4ம் திகதி முதல் ஜனவரி 31ம் திகதி வரையில் 2,298 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
பரீட்சைகளுக்கான அட்டவணை மற்றும் பரீட்சை மண்டப அட்டைகள் என்பன பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் தங்களுக்கான பரீட்சை ஆவணங்கள் கிடைக்கப்பெறாதவர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lkஇல் அவற்றை தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.
