திருகோணமலை – மொரவௌ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பெண்ணொருவர் உள்ளிட்ட 6 பேர் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 28 வயது முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை – மிரிஸ்வௌ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கை நிலத்தை, கால்நடைகள் சேதப்படுத்தியதையடுத்து இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.
இதன்காரணமாக, காயமடைந்த 6 பேர் மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
