இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடு கட்டும் திட்டத்தின் கீழ் (19/02/24) முதல் கட்டமாக கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட செஸ்ட் போர்ட் தோட்டத்தில் ஏழு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கும் 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றது .
குறித்த நிகழ்வு தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் முன்னாள் சபரகமுவ மாகாண சபை உறுப்பினருமான அண்ணாமலை பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
நிகழ்வுக்கு கேகாலை மாவட்ட பெருந்தோட்ட மனிதவளை நிதியத்தின் தலைவரும் ருவான்வெல்ல பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் மற்றும் தோட்டா அதிகாரிகளும் தோட்ட மக்களும் கலந்து கொண்டனர்.

